பாடல் எண் :1532
அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.

6
பொ-ரை: புகலூர்த் தலத்து இறைவர், தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர்; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர்; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர்.
கு-ரை: அண்டவாணர் - தேவர். பாடலன் -பெருமையுடையவன் அல்லது பாடலைப் பாடுபவன் என்க. மதிப்பவர் - தியானிப்பவர். புண்டரீகம் - நெஞ்சக்கமலம்.