|
பாடல் எண் :1537 | பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன் தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. |
| 1 | பொ-ரை; நெஞ்சமே! நீ முற்பிறவிகளிற் செய்த பழவினைகளின் பயனைக் கண்டும் கண்டும் பின்னும் களிப்புற்றுக் கெடுகின்றனையே, வண்டு உலாவுகின்ற மலரையணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி உன் துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக. கு-ரை; பண்டு செய்த பழவினை-முற்பிறவிகளிற் செய்த சஞ்சிதம். பயன்-பிரார்த்தம். கண்டும் கண்டும்-அனுபவத்தால் பார்த்தும் பார்த்தும். களித்தி-களிப்படைகின்றாய். காண்-அசை. வண்டுலா மலர்-தேனுண்ண வண்டுகள் உலவுகின்ற மலர்கள். திரியாய்-திரிவாயாக. துயர்தீர -அத்துன்பம் நீங்க. |
|