|
பாடல் எண் :1548 | பூமே லானும் பூமகள் கேள்வனும் நாமே தேவ ரெனாமை நடுக்குறத் தீமே வும்முரு வாதிரு வேகம்பா ஆமோ அல்லற்படவடி யோங்களே. |
| 1 | பொ-ரை; தாமரைப்பூமேல் உள்ளவனாகிய பிரமதேவனும், பூமகளாகிய இலக்குமிநாயகனாகிய திருமாலும்'யாங்களே பிரமம்' என்று கூறாது நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே! திருவேகம்பத்தை உடையவனே! நின் அடியோமாகிய யாங்கள் அல்லறபடுதலும் ஆமோ? கு-ரை; பூமேலான் -பிரமன். பூமகள் கேள்வன்-திருமகள் கணவனாகிய திருமால். நாமே தேவரெனாமை நாங்களே பரம் பொருள் என்று கூறாமலும்; நடுக்குறவும் என்க. தீமேவும் உருவா-சோதி வடிவாய்த் தோன்றியவனே, அடியோங்கள் அல்லற்பட ஆமோ- அடியோங்களாகிய நாங்கள் துன்புறுதல் தகுதியோ. |
|