|
பாடல் எண் :1553 | சாக்கி யத்தோடு மற்றுஞ் சமண்படும் பாக்கி யம்மிலார் பாடுசெ லாதுறப் பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம் நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. |
| 6 | பொ-ரை; புத்தமும், சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத் திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல், மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக. கு-ரை; சாக்கியம்-புத்தம். பாக்கியமிலார்-சிவநெறிப்பேற்றைக் கடைப்பிடிக்கும் பாக்கியமில்லாதவர்கள். பாடு -பக்கம். உற-பொருந்த; ஏத்தித் தொழுதும் எனக் கூட்டுக. பூக்கொள்-பூக்களைக் கொண்ட. நாக்கொடு ஏத்தி-நாவைக் கொண்டு புகழ்பாடி. நயந்து - விரும்பி. தொழுதும்-வணங்குவோம். |
|