|
பாடல் எண் :1567 | பாலை யாடுவர் பன்மறை யோதுவர் சேலை யாடிய கண்ணுமை பங்கனார் வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு மாலை யாவது மாண்டவ ரங்கமே. |
| 10 | பொ-ரை: பாலைநிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இடிழுதவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது. கு-ரை: பாலை ஆடுவார் - பால் அபிடேகம் கொள்பவர். சேலையாடியகண் - மீனைப்போன்ற கண்கள். வேலை - கடல். ஆர் - பொருந்திய. மாலையாவது - மாலையாகப் பயன்படுவது. மாண்டவர் அங்கம் - இறந்தவர் எலும்புகளே. |
|