|
பாடல் எண் :1574 | யாதே செய்துமி யாமலோ நீயென்னில் ஆதே யேயு மளவில் பெருமையான் மாதே வாகிய வாய்மூர் மருவினார் போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ. |
| 6 | பொ-ரை: எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும். அளவில்லாத பெருமையுடையான் அவன், மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ? கு-ரை: யாதே செய்தும் - பாதகத்தைச் செய்திடினும். யாம்அலோம் நீ எனில் - "உலகினில் என் செயல் எல்லாம் உன் விதியே, நீயே உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்றாயென்றும் நிலவுவதோர் செயலெனக்கு இன்று உன் செயலே என்று நினையின்" என்றபடி. யாம் செய்திலேம் நீயே செய்விக்கின்றாய் என நினைத்தால். ஆதே - அதே சுட்டுநீண்டது. ஏயும் - அதனைப் பொருந்தும் எனக் கொள்கின்ற. மாதேவன் - பெரியதேவன். போதே - வருவாயாக. என்றும்- என்றதும். புகுந்ததும் - இங்கு வந்ததும். |
|