|
பாடல் எண் :1576 | திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. |
| 8 | பொ-ரை: வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர். கு-ரை: திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரைத் திருமறைக்காட்டுத் திருமடத்திற் காணாது தேடித் திருவாய்மூர்க்கு வந்து கொண்டிருக்கும் பொழுது பாடியது இச்செய்யுள். திறக்கப்பாடிய என்னினும் ஒரு பாடலில் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார்; உந்நின்றார். அவருக்குத் தம்மை மறைக்க வல்லரோ என்றார். உறைப்பு - திருத்தொண்டின் வலிமையால், உந்நின்றார் - உவ்விடத்தே நின்றார். சம்பந்தர் அப்பரைக் காணாது தேடிப் பின் வருதலால் உந்நின்றார் என்றார். மறைத்தமையால் இவர் பித்தர் என்க. |
|