பாடல் எண் :1577
தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

9
பொ-ரை: தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள்வாயாக என்று வேண்டினும், பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன், எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ?
கு-ரை: தனக்கு ஏறாமை - தனக்குப்பொருந்தாத செயலாக. தவிர்க்க என்று - கதவைத் திறக்க என்று. நினைந்தேன் பொய்க்கு - நினைத்து விரும்பிய எனது பொருளற்ற பாட்டிற்கும். எனக்கே வந்து - என்னிடத்திலே வந்து. வாய்மூர்க்கே எனா - வாய்மூர்க்கே போவோம் என்று சொல்லி . எதிர் - இவ்விடத்தில் (வழியில்). புனக்கே - காட்டிலே. பொற்கோயில் - அழகிய கோயில். பொய்கொலோ - பொய்த் தோற்றத்தானோ.