|
பாடல் எண் :1580 | கவள மாகளிற் றின்உரி போர்த்தவர் தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர் திவள வானவர் போற்றித் திசைதொழும் பவள மேனியர் பாலைத் துறையரே. |
| 2 | பொ-ரை: திருப்பாலைத்துறையர், சோற்றுக்கவளம் கொள்ளும் யானையின் உரியைப் போர்த்தவர்; வெள்ளிய நகைப்பை உடைய உமைமங்கையை ஒருபங்கிற் கொண்டவர்; தேவர்கள் போற்றித் திசைநோக்கித் தொழும் பவளம் போன்று சிவந்த மேனியர். கு-ரை: கவளம் - யானைக்கிடும் உணவு. மா - பெரிய. உரி - தோல். தவளம் - வெண்மை. தவளவெண்ணகை மங்கை; ஒருபொருட் பன்மொழி (தலத்து அம்பிகையின் திருப்பெயர்). மிக்க வெண்மையைக் காட்டிற்று. திவளவானவர் - விளங்குதலை உடையவானவர். திசைதொழும் - திசைதோறும் வணங்குகின்ற. |
|