பாடல் எண் :1583
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.

5
பொ-ரை: திருப்பாலைத்துறையர், சித்தரும், கன்னியரும், தேவரும், தானவர்களும், பித்தர்களும், நான்கு மறைகளில் வல்லவேதியரும் பேணிய அத்தனே! நம்மை ஆளுடையாய்! என்று கூறும் அன்பர்களுக்கு அன்பராய் இருப்பர்.
கு-ரை: தானவர் - அசுரர். பித்தர் - ஒன்றொடொன்று ஒவ்வாத வேடமும் செயலுமுடையவர். பேணிய - விரும்பிய. பத்தர்கட்கன்பர் - அடியார்களுக்கு அன்பர்.