பாடல் எண் :1593
சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.

4
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின் பணியையும் கொண்டருளும் மைந்தர்(பெருவீரர்)ஆவர்.
கு-ரை: தாம்-சந்திர சூரியர்கள். உடன்வந்து-உடனாய் சேரவந்து. சீர்வழிபாடுகள்-சிறப்பு வழிபாடுகள். செய்தபின்-வழிபாடுகள் செய்தபின்னர். ஐந்தலை அரவு -ஐந்து தலைகளோடு கூடிய நாகம். பணி-பணிவிடை. சந்திரன், சூரியன், ஐந்தலை நாகம் பூசித்த தலம் என்ற தலவரலாற்றுக் குறப்பு அமைந்துள்ளது. அருள்-அருள்செய்த. மைந்தர்-வலியர்.