|
பாடல் எண் :1594 | பண்டொர்நாளிகழ் வான்பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் தண்டமாவிதா தாவின் தலைகொண்ட செண்டர்போல்திரு நாகேச் சரவரே. |
| 5 | பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர், முன்னோர் நாளில் குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச் செய்தவரும், தண்டையாகப் பிரம தேவனின் தலையைக் கொண்ட செண்டு உடையவரும் ஆவர். கு-ரை: பண்டோர் நாள்-முன்பொரு சமயம். இகழ்-இகழ்ந்த. வான்பழி-மிக்கபழி. ஆர்-இழித்தற் பொருளில் வந்தது. கொண்ட-மேற்கொண்ட வேள்விக்குமண்டை-வேள்வியாகிய செருக்கு மிக்க செயல் கெட-அழிய தண்டமா-தண்டனையாக. விதாதா-பிரமன். செண்டர்-செண்டு என்னும் ஆயுதத்தை உடையவர். |
|