|
பாடல் எண் :1595 | வம்பு பூங்குழல் மாது மறுகவோர் கம்ப யானை யுரித்த கரத்தினர் செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை நம்பர் போல்திரு நாகேச் சரவரே. |
| 6 | பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல, ஒப்பற்றதாய் நினைப்பாரை நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர்; செம்பொன்னைப் போன்ற கொன்றை மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர். கு-ரை: வம்பு - மணம் பொருந்திய. பூங்குழல் - பூக்களோடு கூடிய கூந்தலுடைய. மாது - பார்வதி. மறுக - அஞ்சி மயங்க. கம்பயானை - அசைகின்ற யானையை. கரத்தினர் - கையை உடையவர். செம்பொனார் - சிவந்த பொன்னின் நிறம் பொருந்திய. இதழி - கொன்றை. நம்பர் - விரும்பத்தக்கவர். |
|