|
பாடல் எண் :1606 | அரையார் கோவண ஆடைய னாறெலாந் திரையா ரொண்புனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால் கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. |
| 7 | பொ-ரை: இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும், வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப் பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: அரையார்-இடுப்பிலே பொருந்திய. ஆறெல்லாம்-வழிகளெல்லாம். திரையார்-அலைகளோடு கூடிய. ஒண் புனல்பாய்-ஒள்ளிய தண்ணீர் பாய்கின்ற. விரையார்-மணம் பொருந்திய. கரையேனாகில்-என் குறைகளைச் சொல்லேனாயின். |
|