|
பாடல் எண் :1614 | கள்ளி னாண்மல ரோரிரு நான்கு கொண்டு உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார் தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. |
| 3 | பொ-ரை: தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான், தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார். கு-ரை: கள்ளின் நாண்மலர்- தேன் நிறைந்த மலர். ஓர் இருநான்கு - எட்டுமலர்கள். தெள்ளுநீர்-தெளிந்த நீர். |
|