|
பாடல் எண் :1619 | ஓலி வண்டறை யொண்மல ரெட்டினால் காலை யேத்த வினையைக் கழிப்பரால் ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை வேலி சூழ்ந்தழ காயவீரட்டரே. |
| 8 | பொ-ரை: மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும், வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தே வந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர். கு-ரை: ஒலிவண்டறை- ஓலமிடுவதாகிய வண்டுகள் ஒலிக்கின்ற. காலை-காலையிலே. ஆல் அசை. ஆலி-ஒலித்து. கூடிவேலி சூழ்ந்து-வேலிபோலச் சூழ்ந்து. |
|