பாடல் எண் :1621
அட்ட புட்ப மவைகொளு மாறுகொண்
டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்
தட்டு மாறுசெய் கிற்பவ திகைவீ
ரட்ட னாரடி சேரு மவர்களே.

10
பொ-ரை: திருவதிகைவீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள், அட்டபுட்பங்களை விதிமுறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும், ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அனைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர்.
கு-ரை: அட்டபுஷ்பம் - எட்டுமலர்கள். அவைகொளுமாறு - பூக்களை எடுக்கும் விதிமுறைப்படி எடுத்து. அட்டமூர்த்தி - எட்டு வடிவினனாகிய இறைவன். அனாதி - ஆதியற்றவன். அட்டுமாறு செய்கிற்ப - இறைவனைச் சூடுமாறு செய்வார்கள். அடிச்சேருமவர்கள் செய்கிற்ப என்க.