|
| பாடல் எண் :1624 | வேடு தங்கிய வேடமும் வெண்தலை ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும் நாடு தங்கிய நாரையூ ரான்நடம் ஆ பைங்கழ லம்ம வழகிதே. |
| | 3 | பொ-ரை: நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும். கு-ரை: வேடு- வேடர் வடிவம். பலியுண் கொள்கை என்க. கொள்கை-செயல். நாடு தங்கிய-நாட்டின்கண் பொருந்திய. |
|