பாடல் எண் :1627
சூலம் மல்கிய கையுஞ் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலு மம்ம வழகிதே.

6
பொ-ரை: உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர், நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும், பால், நெய், தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும், ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.
கு-ரை: மல்கிய-பொருந்திய; சுடரொடு-நெருப்போடு. ஞாலம் மல்கிய-உலகில் புகழால் நிறைந்த. ஆலநீழல்-கல்லாலநிழல்.