|
பாடல் எண் :1636 | அல்ல லாயின தீரு மழகிய முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் செல்வன் சேவடி சென்று தொழுமினே. |
| 5 | பொ-ரை: அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும், கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக; உம் அல்லலாயின அனைத்தும் தீரும். `அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்றுழு என்றபடி. கு-ரை: அல்லல் -துன்பம். முல்லை வெண்முறுவல்-முல்லை போலும் வெள்ளிய பற்கள். கொல்லை -தினைப்புனம். குறிஞ்சிக் கருப்பொருள் என்றபடி. இது இன அடை. யானை -கயாசுரன் வீடுமே, ஏகாரம் தேற்றம். |
|