|
பாடல் எண் :1640 | கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனைப் பாடு மின்னிர வோடு பகலுமே. |
| 9 | பொ-ரை: கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி, நீர் திரியாது, திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம். கு-ரை: கேடுமூடி - துன்பமே மிகுதியாய்ப் பரவி. கிடந்துண்ணும் - செய்வதொன்றின்றித் துன்பமே நுகரும். உலகீர், நாடே தேடித் திரிகின்றீர்; அது செய்யாது இறைவனை இரவும் பகலும் பாடுமின். சிவகதி - (சிவஞானமாகிய நெறி) சேரலாம் என்றபடி. |
|