|
பாடல் எண் :1658 | திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. |
| 7 | பொ-ரை: திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை. அருள் திறத்தை உடைய அழகு பொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும். கு-ரை: திரைதிரள் - வரிசையாக உருட்டிய சோற்றுத் திரள். திரைவரிசைகளை ஒத்த எனினுமாம். கவளம் - உணவு. திணிக்கும் - வாயில் பெய்துகொள்ளும். பிரட்டர் - வஞ்சகர். பிரித்த - அச் சமண சமயத்திலிருந்து நீங்கச் செய்த. அருள் திறத்து-திருவருள் வலிமையொடு கூடிய தெருட்டரை- தம் முண்மையை உலகுக்குத் தெளியச் செய்பவனாகிய சிவபெருமானை. |
|