|
பாடல் எண் :1671 | கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் தருக்கி னாலெடுத் தானைத் தகரவே வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே. |
| 10 | பொ-ரை: கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை. கு-ரை: கருத்தனாய் - தானே தலைவன் என்ற எண்ணமுடையவனாய். தருக்கினால் - ஆணவத்தால். தகர - அழிய. ஆர் அருள் - அரிய திருவருள். அருத்தியால் - ஆசையால். ஆணவம் உடையாரை இறைவன் ஆட்கொள்ளும் மறக்கருணையை நினைப்பித்தது. |
|