|
பாடல் எண் :1678 | ஐய னேயர னேயென் றரற்றினால் உய்ய லாமுல கத்தவர் பேணுவர் செய்ய பாத மிரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. |
| 7 | பொ-ரை: தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப்பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர். கு-ரை: அரற்றினால் - பல்காலும் சொன்னால். செய்யபாதம் - சிவந்த திருவடிகள். வையம் - உலகம். |
|