|
பாடல் எண் :1681 | பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்க ணித்துரு காமனத் தார்களைப் புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே. |
| 2 | பொ-ரை: வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி, தம்முடைய குற்றங்களை எண்ணி உணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே! (எம்மையாண்டருள்க). கு-ரை: பிறைக்கண்ணிச் சடை - பிறையாகிய தலைமாலையை உடைய சடை. கறைக்கணித்தவர் - தம் குற்றங்களை எண்ணி ஆராய்ந்தவர். கண்டவணக்கத்து ஆய் - தரிசித்த வணக்கத்தை மேற்கொண்டு. உற - பொருந்த. கணித்து - இறைவன் புகழைஎண்ணி. புறக்கணித்திடும் - வெறுக்கும். |
|