பாடல் எண் :1687
காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.

8
பொ-ரை: புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர். காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர்; எலும்பும் திருநீறும் அணிவர்; 'தம்மையே நினைவாகிப் போற்றி என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர்.
கு-ரை: கடிதாகி - விரைவுடையதாய். ஏற்றினும் - இடபத்தின் கண்ணும். இசைந்து - விரும்பி. நினைவாய்த் தம்மைப் போற்றி யென்பார்க்கு அன்பர்.