|
பாடல் எண் :1697 | மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே. |
| 8 | பொ-ரை: குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும், பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று. கு-ரை: மாசு ஆர் - குற்றம் பொருந்திய. பாசமயக்கு - ஆசையாகிய மயக்கத்தை. அறுவித்து- நீங்கச் செய்து. நேசமாகிய-அன்பு வடிவமாகிய. நித்தமணாளனை - என்றும் மணவாளக் கோலத்திலிருப்பவனை. பூசநீர் - பூசநாளில் தீர்த்த விசேடமுடையது. |
|