|
பாடல் எண் :1699 | அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி யருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே. |
| 10 | பொ-ரை: இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய, அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன். கு-ரை: ஆற்றல் -வலிமை. திரைக்கொள் -அலைகளைக் கொண்ட. |
|