|
பாடல் எண் :1701 | முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ் கொத்த லர்குரங் காடு துறையுறை அத்த னென்னஅண் ணித்திட்டிருந்ததே. |
| 2 | பொ-ரை: முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள்மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான். கு-ரை: பவளத்து ஒளிர் தொத்து - ஒளிர் பவளத் தொத்து என மாறுக. விளங்கிய பவளக் கொத்துப் போன்றவன் என்பது பொருள். கொத்தலர் சோலைசூழ் குரங்காடுதுறை என்க. அண்ணித்தல்-இனித்தல். |
|