|
பாடல் எண் :1724 | குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் புற்ற ராவினன் பூவனூ ரீசன்பேர் கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. |
| 3 | பொ-ரை: குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம். கு-ரை: குற்றம் கூடி - குற்றத்தைக் கூடி. குணம்பல கூடாதீர் - பல நல்ல குணங்களைச் சேராது வாழ்வோரே! மற்றும் தீவினை செய்தன - முன்பிறப்பிற் செய்த வினைகளோடு இப்பிறப்பிற் செய்தனவாய தீயவினைகளையும். மாய்க்கலாம் - அழிக்கலாம். கழிவதன் முன்னம் - இறப்பதன் முன்பாக. கற்று வாழ்த்தும் என வினைமுடிவு செய்க. வாழ்த்தும் - வாழ்த்துங்கள். |
|