|
பாடல் எண் :1730 | ஏவம் ஏது மிலாஅம ணேதலர் பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் தேவ தேவன் திருநெறி யாகிய பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. |
| 9 | பொ-ரை: விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும்; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும். கு-ரை: ஏவம் - விதிவிலக்குகள். ஏதும் இலா - எதுவும் இல்லாத. சமண் ஏதலர் - சமணர்களாகிய அயலவர். பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள். சொல்வலை - சாதுரியப்பேச்சாகிய வலை; பொய்யைப் பிறர் மயங்க மெய்போலக் காட்டுதல். நெறி - சமயம். சொல்வலைப்பட்ட பின் பூவனூர் புகுந்த நாள் இன்று. |
|