|
பாடல் எண் :1734 | கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. |
| 2 | பொ-ரை: திருக்கயிலைத் தலைவனும், சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள். கு-ரை: கறுத்தவர் - சினங்கொண்டவராகிய. எயில்கள் - மதில்கள். வெல்வல - வெல்லுதலில் வல்ல. ஆலும் - ஆடும். பயில்கிலார் - வலஞ்சுழிப் பெருமான் திருநாமத்தைப் பழகாதவர். தொழும்பர் - ஆளானவர்; ஏவல் செய்வார். |
|