பாடல் எண் :1749
அருக்க னங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.

10
பொ-ரை: சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.
கு-ரை: அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. திருத்தும் - அவர்களைத் தவறு நீக்கித் திருத்தும். அருத்தி - ஆசை. அல்லல் - துன்பம்.