|
பாடல் எண் :1753 | மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார் நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே. |
| 4 | பொ-ரை: செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன். கு-ரை: மலியும் - நிறைந்த. வாளரவம் - ஒளிபொருந்திய பாம்பு. பொலியும் - அழகில் சிறந்து விளங்கும். நலியும் - உயிர்களைத் துன்புறுத்தும். கூற்றை - இயமனை. நலிந்து - உதைத்துத் துன்புறுத்தும். வலியும் - வலிமையினையும். |
|