|
பாடல் எண் :1757 | அல்ல னென்று மலர்க்கரு ளாயின சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான் வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர் நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே. |
| 8 | பொ-ரை: அலர்க்கு அல்லன் என்றும், அருளாயின சொல்லன் என்றும், சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர். அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன். கு-ரை: அலர்க்கு அல்லன் - நல்லரல்லாதார்க்கு அல்லாதவன். அருளாயின சொல்லன் - அருளுபதேசம் செய்பவன். சொல்லாம் மறை - எழுதாக்கிளவியாய் செவிவழியாய் ஓதப்பட்டு வரும் மறையாகிய சுருதி. |
|