|
பாடல் எண் :1760 | மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. |
| 1 | பொ-ரை: தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக. கு-ரை: மட்டிட்ட - தேன் பொருந்திய; மலர்களை அணிந்த எனக் கூட்டுக. குழலார் - கூந்தலையுடையவர். சுழலில் - ஆசைச்சுழலாகிய. வலைப்பட்டு - வலையின்கண்ணே அகப்பட்டு. பரியாது - வருந்தாது. கட்டிட்ட - பந்தித்துநின்ற. கூடும் - சேருங்கள். |
|