|
பாடல் எண் :1761 | ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும் ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் கால னார்வரு தன்முன் கருவிலிக் கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. |
| 2 | பொ-ரை: உலகில் நிறைந்த மனிதர்களே! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர்உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக. கு-ரை: ஞாலம் - உலகம். ஏலமாமலர் - பொருந்திய சிறந்த பெரிய மலர். இலை - பச்சிலைகள். காலனார் வருமுன் - இறக்குமுன். |
|