பாடல் எண் :1762
பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே
.

3
பொ-ரை: குற்றமுடையவற்றைப் பேசுதலால், நீர் மங்குமாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு, கங்கை சேர்ந்த சடையானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
கு-ரை: பங்கம் - பயனற்றவை. பறைந்து - மனம் வருந்தி. மங்குமா - மனஎழுச்சி குன்றுமாறு. கொங்குவார் பொழில் - தேன் நிறைந்த நீண்ட சோலை.