|
பாடல் எண் :1773 | தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. |
| 4 | பொ-ரை: தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக. கு-ரை: தந்தை தாய் மனைவி என்னும் பிணைப்பு "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை"(குறள்-41.) என்பதால் தெளிவுபடுதல் அறிதற்குரியது. பயில்வு - பழகுதல். எய்திய - பொருந்திய. கொந்து - பூங்கொத்து. |
|