பாடல் எண் :1774
கேளு மின்இள மைய்யது கேடுவந்
தீளை யோடிரு மல்லது எய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே.

5
பொ-ரை: மனிதர்களே! கேட்பீர்களாக; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக; உமக்கு நல்லனவே ஆகும்.
கு-ரை: கேடு வந்து - கெடுதலை அடைந்து. ஈளை - கோழை. இருமல் எய்தமுன் - முதுமை வருமுன்பே. கோளரா - கொள்ளும் வாயையுடைய பாம்பு. நன்கு - முத்தி ஞானம்.