|
பாடல் எண் :1776 | அல்ல லோடரு நோயி லழுந்திநீர் செல்லு மாநினை யாதே கனைகுரல் கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை வல்ல வாறு தொழவினை மாயுமே. |
| 7 | பொ-ரை: துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல், நீர், கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும். கு-ரை: அல்லலோடு - துன்பத்தோடு. அடரும் - நெருக்குகின்ற. நோயில் - பிணியில். செல்லுமா - பயனின்றி இறந்தொழியுமாறு. நினையாதே - நினைக்காமல். கனைகுரல் - கனைக்கின்ற ஒலி. கொல்லையேறு - முல்லை நிலத்து எருது. வல்லவாறு - இயன்றவாறு. |
|