|
பாடல் எண் :1795 | கொன்றை சூடியைக் குன்ற மகளொடும் நின்ற நீலக் குடியர னேயெனீர் என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. |
| 6 | பொ-ரை: என்றும் பொய்யாகிய உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக! கு-ரை: குன்றமகள் - மலையரசன் புதல்வியாகிய பார்வதி. எனீர் - என்று சொல்லுங்கள். என்றும் - எப்பொழுதும். உகந்தே இறுமாக்கும் - மகிழ்வோடு பெருமிதம் கொள்ளும். பொன்றும் போதும் - இறக்கும் போதும். அறிவொண்ணும் - அவனை அறிதல்உண்டாகும். இப்பிறப்பில் வாழ்வு சிறக்கும். இறக்கும்போது அவன் நினைப்பு உண்டாய் மறுபிறப்பும் இல்லையாகும்படிச் செய்யும் என்க. |
|