பாடல் எண் :1798
கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே
.

9
பொ-ரை: கற்றையாகிய செஞ்சடையில், குளிர்ந்த கதிர்களை வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய நீலக்குடி அரன், தேவர் சுற்றிவந்து தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன்.
கு-ரை: கற்றை - பலவற்றின் தொகுதி. செஞ்சடைக்கற்றை எனமாறுக. காய்கதிர் - கிரணங்களை வெளிவிடும் சூரியன். பற்றி - பிடித்து. பராபரன் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானவன். கழற்சோதி - கழலையணிந்த ஒளிவடிவானவன்.