|
பாடல் எண் :1804 | செல்வம் மல்கு திருமங் கலக்குடி செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச் செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச் செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே. |
| 5 | பொ-ரை: செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில், அருட்செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும். கு-ரை: செல்வம் - இயற்கைச்செல்வங்கள். செல்வம் - பேரின்பம். உண்டாக்கும் - மல்கும். சிவநியமம் - சிவத்தைச் சார்விக்கும் நெறி. செல்வம் - மழைவளம். மல்கும் - பொருந்தும். செல்வன் - மங்கல வடிவினன். |
|