|
பாடல் எண் :1806 | மாத ரார்மரு வும்மங் கலக்குடி ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் வேத நாயகன் வேதியர் நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. |
| 7 | பொ-ரை: பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன், தேவர்கள் தலைவன்; வேதநாயகன்; வேதியர்நாயகன்; பூதநாயகன்; புண்ணியமூர்த்தி ஆவன். கு-ரை: மாதரார் - பெண்கள். மருவும் - பொருந்தி வாழும். ஆதிநாயகன் - முதன்மைத் தலைவன். அண்டர்கள் நாயகன் - தேவர்கள் தலைவன். வேதியர் - வேதமோதுபவர். பூதநாயகன் - பசுபதி. |
|