பாடல் எண் :1808
கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.

9
பொ-ரை: மங்கலக்குடி இறைவன், தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும், குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், அன்புசிறிதும் இல்லாதவர்களும், கீழானவர்களும், குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க, உய்ந்தேன்.
கு-ரை: கூசுவாரலர் - பாவம் செய்ய மனம் கூசமாட்டார்கள். நேசம் - அன்பு. நீர் இழிதகைமையுடையவர். வெறுக்கத்தக்கவர். மாசர்பால் - உடலும் அறிவும் குற்றமுடையவர். வேறுபடுக்க - பிரிக்க.