|
பாடல் எண் :1809 | மங்க லக்குடி யான்கயி லைம்மலை அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே. |
| 10 | பொ-ரை: மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும், தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான். கு-ரை: அலைத்து - அசைத்து. எடுக்குற்ற - தூக்குதலைச் செய்த. கரம் - கைகள். தகர்ந்து - சிதறி. அலைத்து அழுது - தன் தவறுக்கு அடித்துக்கொண்டு அழுது. உய்ந்தான் - பிழைத்தான். |
|