|
| பாடல் எண் :1810 | விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் இரும்பி னூறல றாததோர் வெண்தலை எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. |
| | 1 | பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! வெண்தலையைக் கையில் உடையவனும், எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன், கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான். அவனை விடாது விரும்பியுறுவாயாக. கு-ரை: ஊறு விரும்பிவிடேல் - கேடுகளை விரும்பி வாணாளை வீணாளாக்கவிடாதீர். கரும்பின் ஊறல் - கரும்பின் சாறு. கலந்தார்க்கு - மனம் ஒன்றியவர்கட்கு. இரும்பின் - இரும்பு போன்ற. ஊறல் அறாததோர் - நிணக்கசிவு - அறாததொரு. வெண்டலை ஏந்தியவன் என்க. |
|