பாடல் எண் :1811
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

2
பொ-ரை: எங்கள் இறைவன், விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும், பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும், நெற்றிக்கண்ணனும் ஆகி, மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன்.
கு-ரை: பிறங்கு - விளங்குகின்ற. பிஞ்ஞகன் - அழித்தற்கடவுள். பேணு - விரும்புகின்ற. சீர் - சிறப்பையுடைய. கறங்கு - சுழல்கின்ற. நறும் - தூய.