|
பாடல் எண் :1817 | இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு துன்ப மும்முட னேவைத்த சோதியான் அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் கின்ப னாகு மெறும்பியூ ரீசனே. |
| 8 | பொ-ரை: எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும், "அன்பனே! அரனே!ழு என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் . கு-ரை: உடனே - ஒருசேர என்னும்பொருட ந டு. இவ்வுலகில் பிறப்பும் இன்ப துன்பமும் ஆகிய இருவினைப்பயனும் உடன் வைத்தவன் என்க. சோதியான் - ஒளி வடிவினன். அரற்றுவார்க்கு - பலகாலும் சொல்லுவார்க்கு. |
|